வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல்: கைதான 11 பேருக்கு விளக்கமறியல்

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல்: கைதான 11 பேருக்கு விளக்கமறியல்

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல்: கைதான 11 பேருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2018 | 4:37 pm

Colombo (News 1st) மின்னேரியா தேசிய பூங்காவில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹிங்குராங்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் ஹிங்குராங்கொட பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் நேற்றைய (28) தினம் இருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று முதல் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகியிருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்