மூன்று நாட்களுக்கு ஒரு யானை வீதம் உயிரிழப்பு

மனித செயற்பாடுகளினால் 3 நாட்களுக்கு ஒரு யானை வீதம் உயிரிழப்பு

by Staff Writer 28-08-2018 | 12:31 PM
Colombo (News 1st) நாட்டில், மனித செயற்பாடுகள் காரணமாக 3 நாட்களுக்கு ஒரு யானை வீதம் உயிரிழப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழப்பதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், கடந்த வருடத்தில் சுமார் 270 யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த வனஜீவராசிகள் திணைக்களம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளிலேயே அதிக யானைகள் உயிரிழக்கின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், நாட்டில் தற்போது 5,800 காட்டு யானைகள் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனைத்தவிர, நாடு முழுவதும் தந்தமுடைய யானைகள் சுமார் 100 மட்டுமே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.