காணி அபகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மகாவலி திட்டத்தின் ஊடாக காணிகள் அபகரிக்கப்படுகின்றமைக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டப் பேரணி

by Staff Writer 28-08-2018 | 8:14 PM
Colombo (News 1st)  வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மகாவலித் திட்டத்தினால் தமது காணிகள் கபளீகரம் செய்யப்படுவதுடன், பல்வேறு சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி, முல்லைத்தீவு - தேவாலய சந்தியில் இருந்து ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை பயணித்தது. இதன்போது, வட மாகாணத்தில் மகாவலி திட்டத்தின் ஊடாக, பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டமை, காணிகளை அபகரிக்க முயற்சிகள் இடம்பெறுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் கோஷங்களை எழுப்பினர். தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மக்கள் கையளித்தனர்.  

ஏனைய செய்திகள்