திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 28-08-2018 | 5:59 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. நாட்டின் அபிவிருத்திப் பணிகளின்போது எவ்வித பாகுபாடும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 02. இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக செயற்பாட்டு ரீதியான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 03. அரச துறையினரின் சம்பள மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட தேசிய சம்பள கொள்கை தயாரிக்கும் விசேட ஆணைக்குழுவின் பரிந்துரையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். 04. நாட்டில் நிலவிய ஊழல் மிகு தேர்தல் முறைமையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 05. மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வனஜீவராசி அதிகாரிகள் சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து  பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 06. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு, எதிர்வரும் 10 ஆம் திகதி 3 நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று (27) அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் இன்று (28) பதவியேற்கவுள்ளார். 02. மியன்மாரின் ராக்கின் பிராந்தியத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் அந்நாட்டு இராணுவத் தலைமைகள் விசாரணையைச் சந்திக்க வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. விளையாட்டுச் செய்தி 0. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக் கிண்ணத்தை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லும் பயணம் நேற்று (27) ஆரம்பமானது.