ஜப்பானிய வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் விஜயம்

ஜப்பானிய வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் நாட்டிற்கு விஜயம்

by Staff Writer 28-08-2018 | 6:52 AM
ஜப்பானின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நகானே (Kazuyuki Nakane) 3 நாள் விஜயம் மேற்கொண்டு, இன்று (28) நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின்போது அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஜப்பான் நிதியுதவியின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் கடல் ரோந்து சேவைக்காக 2 படகுகளையும், கஸுயுகி நகானே இந்த விஜயத்தின்போது அன்பளிப்பு செய்யவுள்ளார். ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி இனொடெரா இலங்கைக்கான 2 நாள் விஜயத்தை நிறைவுசெய்து, 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் அந்நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின்போது, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களையும் பார்வையிட்டிருந்தார்.