உலக சம்பியன்ஷிப் க்ளிப்டைவிங்: கெரி ஹன்ட் சம்பியன்

உலக சம்பியன்ஷிப் க்ளிப் டைவிங்கில் கெரி ஹன்ட் சம்பியன்

by Staff Writer 28-08-2018 | 1:46 PM
உலக சம்பியன்ஷிப் க்ளிப் டைவிங் போட்டிகளின் ஐந்தாம் கட்டத்தில் பிரித்தானியாவின் கெரி ஹன்ட் சம்பியனானார். 10 கட்டங்களைக் கொண்ட உலக சம்பியன்ஷிப் க்ளிப் டைவிங் போட்டிகளின் ஐந்தாம் கட்டம் டென்மார்க்கில் நடைபெற்றது. பந்தயத்தில் நிலவிய சகல சவால்களையும் முறியடித்து, அபார திறமையை வெளிப்படுத்திய பிரித்தானியாவின் கெரி ஹன்ட் சம்பியன் பட்டம் வென்றார். அவர் 453 புள்ளிகளை ஈட்டினார். ஐந்து கட்டங்களின் முடிவில் முன்னிலையில் நீடிக்கும் பிரான்ஸின் ஸ்டீபன் லொபி 2ஆம் இடத்தையும் மெக்ஸிக்கோவின் ஜொனதன் பெரடீஸ் மூன்றாமிடத்தையும் அடைந்தனர். உலக சம்பியன்ஷிப் க்ளிப் டைவிங் போட்டிகளின் 6ஆம் கட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.