மாகாண எல்லை நிர்ணய அறிக்கை ஆய்விற்கு ஐவரடங்கிய குழு நியமனம்

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை ஆய்விற்கு ஐவரடங்கிய குழு நியமனம்

மாகாண எல்லை நிர்ணய அறிக்கை ஆய்விற்கு ஐவரடங்கிய குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2018 | 8:38 pm

Colombo (News 1st)  மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை ஆய்வு செய்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நியமிக்கப்பட்டுள்ளது.

R.M.H.L. ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கலாநிதி A.S.M. நவுபல் ஆகியோர் சபாநாயகர் நியமித்த குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாகாண சபைகள் திருத்தப்பட்ட தேர்தல்கள் சட்டமூலத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சபாநாயகர் இந்த குழுவை நியமித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கை தயாரிப்பதில் அரசாங்கம் செலவிட்ட தொகை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வேண்டி அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்