நீண்ட இடைவௌிக்கு பின் மாதவனுடன் இணையும் அனுஷ்கா

நீண்ட இடைவௌிக்கு பின் மாதவனுடன் இணையும் அனுஷ்கா

நீண்ட இடைவௌிக்கு பின் மாதவனுடன் இணையும் அனுஷ்கா

எழுத்தாளர் Bella Dalima

28 Aug, 2018 | 5:36 pm

அனுஷ்கா கடைசியாக நடித்த பாகுபலி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து, பல கதைகள் கேட்டும் அவருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் ”சைலன்ட்” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வசனங்களே இல்லாத த்ரில்லர் படமாக இது உருவாகிறது.

இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோணா வெங்கட் தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா, மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

2006 ஆம் ஆண்டில் வௌியான ரெண்டு படத்தில் அனுஷ்கா, மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்