திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஸ்டாலின் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஸ்டாலின் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஸ்டாலின் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2018 | 12:11 pm

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், தலைவருக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர்
க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதன்போது, பொதுக்குழுவில் பங்கேற்றுள்ள தி.மு.க. நிர்வாகிகள் கரகோஷங்களை எழுப்பி ஆரவாரம் செய்து அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் தலைவர் பொருளாளர் பதவிக்கான தேர்தல் இன்று (28) நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார்.

இதனை முன்னிட்டு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு செயல் தலைவர் மு.க. ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்படும் கூட்டம் என்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி ஏராளமான தொண்டர்களும் சென்னையில் குவிந்துள்ளனர்.

திராவிட இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் கருணாநிதி மீது ஆணையிட்டுக் காப்போம் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்