by Staff Writer 27-08-2018 | 6:36 PM
Colombo (News 1st) அரச துறையினரின் சம்பள மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட தேசிய சம்பள கொள்கை தயாரிக்கும் விசேட ஆணைக்குழுவின் பரிந்துரையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரச துறையினரின் சம்பள மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட தேசிய சம்பள கொள்கை தயாரிக்கும் விசேட ஆணைக்குழுவின் முதலாவது அமர்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளூடாக அடுத்த வரவுசெலவு திட்டத்தினூடாக , தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த ஆணைக் குழுவின் முதலாவது அமர்வு இன்று (27) நடைபெற்றது.
15 பேர் அடங்கிய இந்த விசேட ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி எஸ். ரனுக்கே செயற்படவுள்ள அதேநேரம் குறித்த ஆணைக்குழுவின் செயலாளராக எச்.ஜீ. சுமனசிங்க செயற்படவுள்ளார்.
தற்போது பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள அரச சேவையாளர்களின் சம்பளத்தை, மீளாய்வு செய்து தேசிய சம்பள கொள்கைக்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதே இந்த ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.