தற்காலிகமாக மூடப்பட்ட மின்னேரியா தேசிய பூங்கா

தற்காலிகமாக மூடப்பட்ட மின்னேரியா தேசிய பூங்கா

by Staff Writer 27-08-2018 | 2:38 PM
Colombo (News 1st) மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வனஜீவராசி அதிகாரிகள் சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தேசிய பூங்காவில் பணிபுரியும் வனஜீவராசி அதிகாரிகள் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்னேரிய தேசிய பூங்காவிற்கு அனுமதியின்றி பிரவேசித்து, சட்ட ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வனஜீவராசி அதிகாரிகளால் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று இரவு வனஜீவராசிகள் அலுவலகத்திற்குள் நுழைந்த மீனவர்கள் சிலர், அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, கைது செய்யப்பட்டிருந்த மீனவரை அழைத்து சென்றதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மீனவர்களின் தாக்குதலில் 10 அதிகாரிகள் காயமடைந்ததுடன், நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.