by Staff Writer 26-08-2018 | 8:15 AM
Colombo (News 1st) நாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பணிப் பகிஷ்கரிப்புகளால், முதலீட்டு வாய்ப்புகள் அற்றுப்போவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.
கடந்த பல வருடங்களுடன் ஒப்பிடுகையில், வௌிநாட்டு முதலீடுகள் குறைவடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிரிமல் அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.