ஈரானிய நிலநடுக்கத்தில் ஒருவர் பலி

ஈரானிய நிலநடுக்கத்தில் ஒருவர் பலி

by Chandrasekaram Chandravadani 26-08-2018 | 8:40 AM
ஈரானின் மேற்குப் பகுதியில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 58 பேர் காயமடைந்துள்ளனர். ஈரானின் ஜாவான்ருட் (Javanrud) நகரின் மேற்குப் பகுதியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஈராக்கிய எல்லையுடனான பகுதியில் 7.3 ரிச்டரில் தாக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 530 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.