அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இராஜினாமா

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இராஜினாமா

by Chandrasekaram Chandravadani 26-08-2018 | 10:51 AM
அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) தனது பதவியை இராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ஸ்கொட் மொரிசன், தமது புதிய அமைச்சரவையை நியமிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. அதேநேரம், அடுத்த வருடத் தேர்தலில் ஜூலி பிஷப் போட்டியிடமாட்டார் என அறிவிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சித் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற வாக்கெடுப்பின்மூலம், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் பதவியிலிருந்து விலக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.