அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கெய்ன் காலமானார்

அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கெய்ன் காலமானார்

by Chandrasekaram Chandravadani 26-08-2018 | 7:35 AM
அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் செனட்டருமான ஜோன் மெக்கெய்ன் (John McCain) தனது 81ஆவது வயதில் நேற்று (25) காலமானார். இவர் நேற்று உயிரிழந்ததாக அவரது அலுவலகம் சிறிய அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மூளைப் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட ஜோன் மெக்கெய்ன், சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.