வீபோர்ஸின் 2ஆம் கட்டப் பணிகள் இன்று நீர்கொழும்பில்

மக்கள் சக்தியின் வீபோர்ஸின் 2ஆம் கட்டப் பணிகள் நீர்கொழும்பில்

by Staff Writer 25-08-2018 | 10:01 AM
Colombo (News 1st) மக்கள் சக்தியின் 'வீ போர்ஸ்' செயற்றிட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகள் நீர்கொழும்பு - முஹந்திரம்பிடி களப்பு இறங்குதுறையில் இன்று (25) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். பல்வேறு குப்பைகளால் மாசுபட்டுள்ள நீர்கொழும்பு - முஹந்திரம்பிடி இறங்குதுறை சுத்தப்படுத்தும் நடவடிக்கை இதன்மூலம் முன்னெடுக்கப்படும். வீ போர்ஸின் முதல்கட்டப் பணிகள் அண்மையில் சீகிரியாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.