உத்தியோகபூர்வ நாணய அலகாகும் சீனாவின் யுவான் 

உத்தியோகபூர்வ நாணய அலகாக சீனாவின் யுவானை ஏற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் தீர்மானம் 

by Staff Writer 25-08-2018 | 9:34 PM
Colombo (News 1st) கொடுக்கல் வாங்கல் செய்யும் உத்தியோகபூர்வ நாணய அலகாக சீனாவின் யுவானை ஏற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, யுவான் நாணய அலகிற்கு அமெரிக்க டொலருக்கு சமமான அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. இதனால் உலக சந்தையில் அமெரிக்க டொலருக்குள்ள முன்னுரிமை பின்னடைவை சந்திக்கும். இதேவேளை, இலங்கை ரூபாவின் விற்பனை விலை அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 162 ரூபா 11 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.