by Staff Writer 24-08-2018 | 6:17 PM
Colombo (News 1st) அமெரிக்க போர்க்கப்பலான USS Anchorage எனும் கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது
திருகோணமலையை வந்தடைந்த இந்தக் கப்பலை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
பசுபிக் சமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகளுக்கு இடையில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற பயிற்சியின் தொடர்ச்சியாகவே இந்தக் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இலங்கை - அமெரிக்காவிற்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தக் கப்பலின் வருகை அமைந்துள்ளது.
இலங்கை - அமெரிக்க கடற்படையினருக்கு இடையிலான பயிற்சி இன்று இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.