USS Anchorage போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

USS Anchorage போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

USS Anchorage போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2018 | 6:17 pm

Colombo (News 1st)  அமெரிக்க போர்க்கப்பலான USS Anchorage எனும் கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

திருகோணமலையை வந்தடைந்த இந்தக் கப்பலை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

பசுபிக் சமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகளுக்கு இடையில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற பயிற்சியின் தொடர்ச்சியாகவே இந்தக் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இலங்கை – அமெரிக்காவிற்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தக் கப்பலின் வருகை அமைந்துள்ளது.

இலங்கை – அமெரிக்க கடற்படையினருக்கு இடையிலான பயிற்சி இன்று இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்