அவுஸ்திரேலியாவின் பிரதமரானார் ஸ்கொட் மொரிசன்

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவிப்பிரமாணம்

by Bella Dalima 24-08-2018 | 3:35 PM
Colombo (News 1st)  அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னர், மெல்கம் டர்ன்புல் லிபரல் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டமையால் அவர் பிரதமர் பதவியை இழந்தார். அதற்கமைய, புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன், அதிக வாக்குகளை ஸ்கொட் மொரிசன் பெற்றார். அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் ஜூலியன் பிஷப், பீட்டர் டட்டன் (Peter Dutton ) மற்றும் ஸ்கொட் மொரிசன் ஆகியோர் கட்சித் தலைமை பதவிக்கு போட்டியிட்டனர். அவுஸ்திரேலியாவின் அரசியல் வரலாற்றில் பிரதமர் பதவியிலிருந்து விலகும் நான்காவது பிரதமராக மெல்கம் டர்ன்புல் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.