by Bella Dalima 24-08-2018 | 5:10 PM
அரசியல் அழுத்தங்களுக்கு அமெரிக்க நீதித்துறை அடிபணியாது என அந்நாட்டு சட்ட மா அதிபர் ஜெஃப் செஷன்ஸ் (Jeff Sessions) தெரிவித்துள்ளார்.
ஜெஃப் செஷன்ஸின் கட்டுப்பாட்டில் அமெரிக்க சட்டத்துறை இல்லை என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த கருத்திற்கே அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் ஆதரவாளரான ஜெஃப் செஷன்ஸ், 2016 இல் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான விசாரணையில் இருந்து பாரபட்சமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பதற்காக விலகியிருந்தார்.
அத்துடன், பதவியில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள ராட் ரான்ஸ்டெனிடம் குறித்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.
இந்த நிலையிலேயே அமெரிக்க நீதித்துறை செயற்பாடுகள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.