மஹிந்தானந்த அளுத்கமகே வௌிநாடு செல்ல அனுமதி

மஹிந்தானந்த அளுத்கமகே வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 23-08-2018 | 5:01 PM
Colombo (News 1st)  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவர் வௌிநாடு சென்று வர கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜயரத்ன இன்று அனுமதியளித்தார். இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்திற்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர், சீனாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி அதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார். மேலும், இந்த வழக்கின் 5 ஆவது, 8 ஆவது, 12 ஆவது மற்றும் 21 ஆவது சாட்சியாளர்களை அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.