புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-08-2018 | 6:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்றால் நீங்கள் அமைச்சரவையை எடுத்துக்கொண்டு அமைச்சராக செல்லுங்கள். இந்த அரசோடு கூட்டரசாங்கத்தை நடத்துங்கள். இரவில் மட்டும் அவருடன் இணைந்துகொண்டு பகலில் எதிர்க்கட்சிபோல் இருப்பது சரியான ஜனநாயக முறையல்ல என ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட அருண் தம்பிமுத்து தெரிவித்தார். 02. கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 03. 18 வயதுக்கும் குறைவான வயதுடைய பிள்ளைகளின் தாய்மார்களுக்கு வௌிநாடு செல்வதற்கான அனுமதி வழங்க வேண்டாமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 04. அரச ஊழியர்களின் சம்பள மீளாய்வுக்காக எஸ். ரனுக்கேவின் தலைமையிலான 15 பேர் அடங்கிய விசேட ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. 05. முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரத்தை 35 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்காமலிருப்பது தொடர்பிலான யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது. 06. வட மாகாணத்தில் வறட்சி காரணமாக 91,639 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவிற்கு பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். 02. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வௌ்ளம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் அஞ்சல் நீச்சல் போட்டியில் விதிமுறைகளை மீறி செயற்பட்டமையால், இலங்கை அணிக்கு போட்டியிலிருந்து வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டது. 02. ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் – 2018 விருதை, இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் டேவிட் பெக்கம் சுவீகரித்துள்ளார்.