பிரசார தூதர்களாக விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா 

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசார தூதர்களாக விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா தெரிவு

by Bella Dalima 23-08-2018 | 4:52 PM
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை பிரசார தூதர்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு 2019 ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” இலச்சினை, மற்றும் வலைத்தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆரம்பித்து வைத்தார். திரைப்பட பிரபலங்கள் மூலமாக மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், சணல் பைகள், காகித பைகள் போன்றவற்றை உபயோகிப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார். பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வதற்கு விளம்பரத் தூதுவர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். சூர்யா, கார்த்திக், ஜோதிகா ஆகியோருக்கு படப்பிடிப்பு இருக்கின்ற காரணத்தினால் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.