தனியார் வைத்தியசாலை கட்டணங்களுக்கான நிர்ணயத்தொகை

தனியார் வைத்தியசாலை கட்டணங்களுக்கு அடுத்த வாரம் முதல் நிர்ணயத்தொகை

by Staff Writer 23-08-2018 | 11:44 AM
Colombo (News 1st) தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களுக்கு, அடுத்த வாரம் முதல் நிர்ணயத் தொகை விதிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அந்தவகையில், 53 மருத்துவ கட்டணங்களுக்கான கொடுப்பனவு இவ்வாறு நிர்ணயிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணங்களுக்கான நிர்ணயத்தொகை அடங்கிய பட்டியலை நிறைவுசெய்து விரைவில் அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து அறிக்கை கிடைத்தவுடன், அதனை வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது. சத்திரசிகிச்சை, ஆய்வுகூட கட்டணங்கள், குழந்தை பிரசவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் தேவைகளுக்கு அறவிடப்படும் கட்டணங்களுக்கே இவ்வாறு நிர்ணயவிலை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.