கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகம்

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும்

by Chandrasekaram Chandravadani 23-08-2018 | 7:13 AM
Colombo (News 1st) மழைவீழ்ச்சி இன்று முதல் அதிகரிப்பதுடன், கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக  வானிலை அதிகாரி மொஹமட் சாலீஹீன் தெரிவித்துள்ளார். அத்தோடு, வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். தென் மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில், யாழ். கரையோர கடற்பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். அதேநேரம் காற்று மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் மேற்குத் திசையிலிருந்தும் ஏனைய கடற்பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்தும் வீசும். சில சமயங்களில் கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வானிலை அதிகாரி மொஹமட் சாலீஹீன் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்