ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பங்கேற்குமாறு த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பங்கேற்குமாறு த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பங்கேற்குமாறு த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2018 | 9:05 pm

Colombo (News 1st)  வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் அடுத்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாண முன்னேற்றப் பணிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட 48 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனும் இடம்பெற்றிருந்தார்.

எனினும், அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளை திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என தெரிவித்து சி.வி. விக்னேஷ்வரன் இந்த செயலணிக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என கடந்த மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், நேற்று மைலிட்டி துறைமுகத்தின் துரித அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இந்த செயலணிக் கூட்டத்தில் அரசியல் பேதமின்றி கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு ஜனாதிபதி செயலணியின் கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்