அரைசொகுசு பஸ் சேவையை நிறுத்துவது குறித்து ஆராய விசேட குழு

அரைசொகுசு பஸ் சேவையை நிறுத்துவது குறித்து ஆராய விசேட குழு

அரைசொகுசு பஸ் சேவையை நிறுத்துவது குறித்து ஆராய விசேட குழு

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2018 | 6:40 am

Colombo (News 1st) அரை சொகுசு பஸ் சேவையை நிறுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரை சொகுசு பஸ் சேவையில் ஈடுபட்ட பஸ்களை, சாதாரண பஸ் சேவை அல்லது அதி சொகுசு பஸ் சேவையில் ஈடுபடுத்துவதற்கு பஸ் உரிமையானர்களுக்கு சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான தகவல் திரட்டும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுமார் 50 பஸ் உரிமையாளர்களை தற்போது தங்களை சேவைகளை மாற்றுவது தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாக எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.

தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், அரை சொகுசு பஸ் சேவையை நீக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்