செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 22-08-2018 | 5:49 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, தமிழ் தெரிந்த உளநல ஆலோசகர்களை இந்தியாவிலிருந்து வரவழைக்க மேற்கொண்ட முயற்சிகளை அரசாங்கம் ஏற்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். 02. புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகள் 30 பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நேற்று முன்தினம் (20) நியமனம் பெற்றனர். 03. கண்காணிப்பு உறுப்பினர் பதவிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இளைஞர் விவகாரம், திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான இணைப்பு செயற்பாடுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 04. கொழும்பு – வோர்ட் பிளேஸ் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். 05. வழக்கு விசாரணைகள் தாமதமடைவதாகத் தெரிவித்து, போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளின் விபரங்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. நாட்டில் வறுமையை முற்றாக ஒழிப்பதுடன், கல்வி அறிவு வீதத்தை அதிகரிக்கப்போவதாக பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 02. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகள் மீதான விசாரணைகளை நிறைவு செய்யக்கோரும் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்திய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. விளையாட்டுச் செய்தி 01. நேற்று நடைபெற்ற 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் 3ஆவது நாள் போட்டியில், பட்மிண்டன் வீரரான புவனேக குணதிலக ஒற்றையர் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டது.