பகலில் மட்டும் எதிர்க்கட்சிபோல் இருப்பது முறையல்ல

இரவில் இணைந்துகொண்டு பகலில் எதிர்க்கட்சிபோல் இருப்பது ஜனநாயக முறையல்ல: அருண் தம்பிமுத்து

by Bella Dalima 22-08-2018 | 9:42 PM
Colombo (News 1st) இன்று கொழும்பில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அருண் தம்பிமுத்து, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் இருந்துகொண்டு, ஜனநாயக மரபிற்கு முரணாக 3 தடவைகள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தமையை அருண் தம்பிமுத்து சுட்டிக்காட்டினார்.
''அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்றால் நீங்கள் அமைச்சரவையை எடுத்துக் கொண்டு அமைச்சராக செல்லுங்கள். இந்த அரசோடு கூட்டரசாங்கத்தை நடத்துங்கள். இரவில் மட்டும் அவருடன் இணைந்துகொண்டு பகலில் எதிர்க்கட்சிபோல் இருப்பது சரியான ஜனநாயக முறையல்ல''
எனவும் அவர் தெரிவித்தார். மேலதிக தகவல்களை காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்