Colombo (News 1st) இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, இன்று (22) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
வீரகெட்டிய, மெதமுலன ராஜபக்ஸ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் சந்த்ர ராஜபக்ஸவின் உடலுக்கும் சுப்ரமணியன் சுவாமி இதன்போது அஞ்சலி செலுத்தியுள்ளார்.