மஹிந்தவின் சகோதரர் சந்த்ரா ராஜபக்ஸ காலமானார்

மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் சந்த்ரா ராஜபக்ஸ காலமானார்

by Staff Writer 21-08-2018 | 4:06 PM
Colombo (News 1st)  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் சந்த்ரா ராஜபக்ஸ தனது 70 ஆவது வயதில் காலமானார். தங்காலை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்னார் இன்று (21) பகல் காலமானதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.