புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு 

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகள் 30 பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம்

by Staff Writer 21-08-2018 | 8:40 PM
Colombo (News 1st)  புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகள் 30 பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நேற்று (20) நியமனம் பெற்றனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு இரண்டாம் கட்டமாக இந்த அரச நியமனம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. அமைச்சினால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அரச வேலைவாய்ப்புகளில் உள்வாங்கப்படல் வேண்டும் என அமைச்சர் சுவாமிநாதன் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து, அமைச்சரவை அனுமதி கிடைத்தமைக்கமைவாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. அரச நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகள் அமைச்சர் சுவாமிநாதனை, அமைச்சின் அலுவலகத்தில் நேற்று சந்தித்தனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள் 30 பேருக்கு முதற்கட்டமாக கடந்த வருடம் அரச நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.