தமிழ் உளநல ஆலோசகர்களை அரசு ஏற்கவில்லை

தமிழ் தெரிந்த உளநல ஆலோசகர்களை வரவழைக்கும் முயற்சிகளை அரசாங்கம் ஏற்கவில்லை: சி.வி.விக்னேஷ்வரன்

by Bella Dalima 21-08-2018 | 9:17 PM
Colombo (News 1st)  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி தமிழ் தெரிந்த உளநல ஆலோசகர்களை இந்தியாவில் இருந்து வரவழைக்க மேற்கொண்ட முயற்சிகளை அரசாங்கம் ஏற்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று ஆரம்பமான ''நல்நிலைக்கான பயணம்'' எனும் உள ஆரோக்கியம் தொடர்பில் விளிப்புணர்வூட்டும் பயணத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். உள ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் உளநலனைக் கட்டியெழுப்புவதற்காகவும் குடும்ப புனர்வாழ்வு நிலையம் இந்த விழிப்புணர்வு பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. முதல் நாள் பயணத்தை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ஆரம்பித்து வைத்தார். மன்னார் மாவட்ட செயலக முன்றலில் இன்று ஆரம்பமான உளநல விழிப்புணர்வு பேரணி 6 நாட்கள் தொடர்ந்து பயணிக்கவுள்ளதுடன், வவுனியாவில் எதிர்வரும் 26 ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது. மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...