ஜனாதிபதி - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

by Bella Dalima 21-08-2018 | 3:44 PM
Colombo (News 1st)  சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜப்பான் விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடபடிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் இன்றைய சந்திப்பின் போது மீளாய்வு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டது. இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையிலான தொடர்புகளை விரிவுபடுத்தி இருநாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா  (Itsunori Onodera) இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.