கண்டிக்கு விசேட ரயில் சேவை

கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட ரயில் சேவை

by Staff Writer 21-08-2018 | 10:12 AM
Colombo (News 1st) கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் அசள பெரஹராவை முன்னிட்டு, இன்று (21) முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரை விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் விஜித சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் காலை 9.50 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி ஒரு ரயில் பயணிக்கவுள்ளதுடன், அது பிற்பகல் 1.15 ற்கு கண்டியை சென்றடையவுள்ளது. அத்துடன், கண்டியிலுருந்து முற்பகல் 11.45 ற்கு கொழும்பு கோட்டை நோக்கி ஒரு ரயிலும் நாவலப்பிட்டி நோக்கி ஒரு ரயிலும் பயணிக்கவுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து காலை 7.05 ற்கு ஒரு ரயிலும் கண்டியிலிருந்து இரவு 7 மணிக்கு ஒரு ரயிலும் பயணிக்கவுள்ளதாக விஜித சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.