புனித அரபா தினத்தில் விசேட துஆப் பிரார்த்தனைகள்

புனித அரபா தினத்தில் விசேட துஆப் பிரார்த்தனைகள்

by Staff Writer 20-08-2018 | 6:52 PM

புனித ஹஜ் கடமைக்காக சென்றுள்ள ஹஜ்ஜாஜிகள் இன்று (20) புனித அரபா மைதானத்தில் ஒன்றுகூடி விசேட துஆப் பிராத்தனைகளில் ஈடுபட்டனர்.

இம்முறை ஹஜ் கடமையில் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்துகொண்டுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையே ஹஜ் கடமையாகும். வசதி படைத்த மற்றும் தேக ஆரோக்கியமுள்ள அனைத்து முஸ்லிம்களும் கட்டாயம் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனையாகும். ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமைக்காக சென்றுள்ள இலட்சக்கணக்கான ஹஜ்ஜாஜிகள் நேற்று இரவு புனித அரபா மைதானத்தை சென்றடைந்தனர். சவூதி நேரப்படி இன்று லுஹர் தொழுகையின் பின்னர் அரபா தின பிரசங்கம் நடைபெற்று விசேட துஆப் பிராத்தனைகள் இடம்பெற்றன. ஹஜ் கடமையில் அரபா மைதானத்தில் தரிப்பது கட்டாயமாகும். ஹஜ் கடமைக்காக சென்றுள்ள அனைத்து ஹாஜிகளும் ஒரே இடத்தில் ஒன்றுகூடும் இடம் அரபா மைதானமாகும். புனித ஹஜ் கடமைக்காக சென்று சுகயீனமுற்ற ஹாஜிகளை சவூதி அரசாங்கம் ஹெலி கொப்டர்கள் மூலம் அரபா மைதானத்திற்கு அழைத்து வந்து, பின்னர் அவர்களை மீண்டும் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் சென்றனர். இன்று இரவு முஸ்தலிபாவிற்கு செல்லும் ஹாஜிகள், நாளை மினாவை சென்றடையவுள்ளனர். இம்முறை இலங்கையிலிருந்து 3,000 ஹஜ்ஜாஜிகள் புனித ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்