by Staff Writer 20-08-2018 | 5:01 PM
மன்னார் சதொச கட்டட வளாகத்தில் காணப்படும் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (20) மீள ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த 10ஆம் திகதிக்கு பின்னர் இன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.
53 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகளில் இதுவரையில் 66 மனித எலும்புக் கூடுகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வின்போது, அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளை துப்பரவு செய்து வௌியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஏற்கனவே, வௌியேற்றப்பட்ட எலும்புக்கூடுகள் மன்னார் நீதவான் நீதிமன்ற கட்டட வளாகத்தில் உள்ள அறையொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.