ஞாயிற்றுக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-08-2018 | 5:56 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. நல்லூர் உற்சவல காலத்தில் ஆலய வளாகத்தில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது. சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில் யாழ். மாநகர சபையினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 02. பெலியத்தவிலிருந்து – மாத்தறை கொடகம வரையான அதிவேக நெடுஞ்சாலையை அமைத்தால், நாடு நட்டமடையும் என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 03. ''இது வேலைசெய்பவர்கள் உள்ள அரசாங்கம். தம்பட்டம் அடித்து ஆடி முடித்து வீட்டிற்குச் செல்பவர்கள் உள்ள அரசாங்கமல்ல. அதிகமாக பேச வேண்டியதில்லை” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 04. சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதேச மட்டத்தில் 330 குழுக்களை ஸ்தாபிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. 05. ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ரயில் கட்டணம் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 06. யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் ஹெல்மெட்டினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டுச் செய்தி 01. இந்தோனேஷியாவின் லொம்போக் தீவில் மீண்டும் 6.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 200 மீற்றர் ப்றீஸ்டைல் நீச்சல் போட்டியில், இலங்கையின் மெத்தியூவ் அபேசிங்க தேசிய சாதனையை புதுப்பித்தார்.