எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம்

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரிப்பு

by Staff Writer 20-08-2018 | 7:24 AM
Colombo (News 1st) நாட்டில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,691 பேர் எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதாவது, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இரத்தினபுரி மாவட்டத்தில் 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வயலை அண்டிய பகுதிகளிலேயே அதிகமானோர், எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். எலிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிய மருத்துப் பொருட்களை வழங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.