இலங்கை மகளிர் கபடி அணி இரண்டாவது வெற்றி

இலங்கை மகளிர் கபடி அணி இரண்டாவது வெற்றி

by Staff Writer 20-08-2018 | 9:14 PM

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கபடி அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு விழாவின் இரண்டாம் நாள் இன்றாகும். இன்று (20) காலை நடைபெற்ற ஆடவருக்கான 50 மீற்றர் BACKSTOKE நீச்சல் போட்டியில் இலங்கையின் அகலங்க பீரிஸ் போட்டியிட்டார். 26.57 செக்கன்களில் போட்டியை கடந்த அவர் நான்காமிடத்தைப் பிடித்தார். இதேவேளை, ஜப்பான் மகளிர் கபடி அணியுடன் இலங்கை மகளிர் கபடி அணி ஒரு போட்டியில் விளையாடியது. போட்டியில் இலங்கை வீராங்கனைகள் அபார திறமையை வெளிப்படுத்தியதோடு, 22 - 17 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை வெற்றிகொண்டனர். இந்தோனேஷிய மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி 34 - 17 என்ற புள்ளிகள் வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஆடவருக்கான ஹொக்கி போட்டியில் இலங்கை அணி ஜப்பான் அணியை ஒரு போட்டியில் சந்தித்தது. போட்டியில் 11 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பான் அணி வெற்றியீட்டியது. இதேவேளை, ஆசிய விளையாட்டு விழாவில் இன்று மாலை கரப்பந்தாட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு போட்டியில் இலங்கை அணி தாய்லாந்துடன் மோதியது. போட்டியில் 3 - 1 என்ற சுற்றுக்கள் கணக்கில் தாய்லாந்து அணி வெற்றியீட்டியது.