லிந்துலை - எல்ஜீன் பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை

லிந்துலை - எல்ஜீன் பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை: 94 பேர் வௌியேற்றம்

by Staff Writer 19-08-2018 | 7:53 AM
Colombo (News 1st) லிந்துலை - எல்ஜீன் பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 26 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் எல்ஜீன் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக 26 வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த இந்த மக்களுக்கான உணவுக்கான பொருட்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக கிராம சேவகர் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஹற்றன் - செனன் செம்புவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியுடனான போக்குவரத்து இதுவரையில் முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்படவில்லை. அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக ஒற்றைவழிப் பாதையூடாக போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தமது போக்குவரத்து செயற்பாடுகளை மேலும் இலகுபடுத்திக் கொள்வதற்கு மாற்றுவழிகளை பயன்படுத்துமாறும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.