by Staff Writer 19-08-2018 | 1:03 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணிப்பதற்காக விமான சீட்டுக்களை பெற்றுக்கொண்ட பயணிகளிடம், மேலதிக கட்டணங்களை அறவிடாமல் தென்னிந்தியாவின் எந்தவொரு விமான நிலையத்தையும் அவர்கள் சென்றடைவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால், கொச்சின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் பயணிகளின் நலன்கருதி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக கொச்சினுக்கு செல்லவுள்ள பயணிகளிடமிருந்து மேலதிக கட்டணங்களை அறவிடாமல் தென்னிந்தியாவின் எந்தவொரு விமான நிலையத்தையும் அவர்கள் சென்றடைவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 1979 என்ற தொலைபேசிக்கு அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 00 91 48 42 61 13 13 என்ற கொச்சின் விமான நிலையத்தின் தொலைபேசி இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும்.
மேலும், கொச்சின் நகரிலுள்ள ஶ்ரீலங்கன் விமான நிலைய அலுவலகத்தின் 00 91 48 42 36 20 42 எனும் தொலைபேசி இலக்கத்தையும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.