நல்லூரில் பொலித்தீன் தடை!

நல்லூரில் பொலித்தீன் தடை!

by Staff Writer 19-08-2018 | 8:56 PM

நல்லூர் உற்சவல காலத்தில் ஆலய வளாகத்தில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை இம்முறை தடைசெய்யப்பட்டுள்ளது.

சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில் யாழ். மாநகர சபையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகன் அருள் பெறவரும் அடியார்கள் பனை ஓலையால் உருவாக்கப்பட்ட அர்ச்சனை தட்டினை பயன்படுத்தி வருகின்றதை காணக்கூடியதாகவுள்ளது. பனை அபிவிருத்தி சபையினரால் பனை ஓலையினால்இழைக்கப்பட்ட அர்ச்சனை தட்டு உட்பட பல உற்பத்திப் பொருட்கள் நல்லூர் ஆலய வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டுகின்றது.