மெத்தியூவ் அபேசிங்கவின் புதிய சாதனை

தேசிய சாதனையை புதுப்பித்தார் - மெத்தியூவ் அபேசிங்க

by Staff Writer 19-08-2018 | 9:02 PM

ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 200 மீற்றர் ப்றீஸ்டைல் நீச்சல் போட்டியில் இலங்கையின் மெத்தியூவ் அபேசிங்க தேசிய சாதனையை புதுப்பித்தார்.

இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு விழாவில் அவர் இந்த சாதனையை புதுப்பித்துள்ளார். ஆசியாவின் பலம் என்ற தொனிப்பொருளில் 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் போட்டிகள் இன்று ஆரம்பமாயின. ஆடவருக்கான 200 மீற்றர் ப்றீஸ்டைல் நீச்சல் போட்டியில் இலங்கையின் மெத்தியூவ் அபேசிங்க தேசிய சாதனையை புதுப்பித்தார். 200 மீற்றர் தூரத்தை அவர் 1 நிமிடம் 50.97 செக்கன்களில் அவர் கடந்தார். எவ்வாறாயினும், ஆடவருக்கான 200 மீற்றர் நீச்சல் போட்டியில் மூன்றாவது தகுதிச்சுற்றில் மெத்தியுவ் அபேசிங்கவால் ஆறாமிடத்தையே பெற முடிந்தது. ஆடவர் 200 மீற்றர் ப்றீஸ்டைல் நீச்சல் போட்டியில் இரண்டாவது தகுதிச்சுற்றில் இலங்கையின் காவிந்ர நுகுவெல முதலிடத்தை தட்டிக் கொண்டார்.