டெங்கு ஒழிப்பு: 369 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 369 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

by Staff Writer 19-08-2018 | 10:05 AM
Colombo (News 1st) ஐந்து மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில், 369 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில், கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, சுமார் 40,000 பகுதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இதன்போது, டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த 1,500 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 35,000க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அத்தோடு, டெங்கு காய்ச்சலினால் இதுவரை 40 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.