இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

by Chandrasekaram Chandravadani 19-08-2018 | 1:54 PM
இந்தோனேஷியாவின் லொம்போக் தீவில் மீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 460க்கும் அதிகமானோர் உயிரிழந்து ஒரு வார காலத்தில் இன்று (19) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரம் பற்றி தெரியவில்லை. தீவின் கிழக்குப் பகுதியிலே நடுக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து வீடுகளிலிருந்து வௌியேறி வீதிகளுக்கு சென்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.