ரயில்வே தொழிற்சங்கத்தினர் - ஜனாதிபதி  சந்திப்பு

ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

by Staff Writer 18-08-2018 | 7:20 PM
Colombo (News 1st)  ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ரயில்வே ஊழியர்களின் தரத்திற்கு அமைய காணப்படக்கூடிய சம்பளப்பிரச்சினை மற்றும் கட்டளையிடும் செயற்பாடுகளின் போது காணப்படக்கூடிய சிக்கல்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆலோக்க ஜயசிங்க குறிப்பிட்டார். அதற்கமைய, ரயில்வே ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் தீர்வு வழங்கக்கூடிய அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து எதிர்வரும் வியாழக்கிழமை ( 23) கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு இதன்போது ஜனாதிபதி தீர்மானித்ததாக அவர் கூறினார். இன்றைய சந்திப்பின் போது வழங்கப்பட்ட சாதகமான தீர்வினால் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்ததாகவும் ஆலோக்க ஜயசிங்க தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்