மக்களின் வரிப்பணத்தில் Jaguar காரை கொள்வனவு செய்யவுள்ள குருநாகல் மாநகர சபை மேயர்
by Bella Dalima 18-08-2018 | 8:19 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை 125 வீதத்தால் அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது.
இதேவேளை, குருநாகல் மாநகர சபை மேயர் 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியுடைய Jaguar ரகக் காரொன்றை கொள்வனவு செய்யத் தயாராகுகின்றமை தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது.
இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் குருநாகல் மாநகர சபைக்காக போட்டியிட்டு, அதன் மேயராக துஷார சஞ்ஜீவ தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய மாவட்டமான குருநாகல் மாவட்டத்தில் 10 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்றியும் 20 வீதத்திற்கும் அதிகமானவர்கள் அடிப்படை வசதிகளின்றியும் இருக்கின்றமை 2016 ஆம் ஆண்டு மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
தனது வீட்டில் இருந்து மாநகர சபைக்கு சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரமே மேயர் பயணிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில், பொதுமக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை விரயமாக்குவது வேதனைப்பட வேண்டிய விடயமல்லவா?