நுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2018 | 7:01 pm

Colombo (News 1st) நுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் காற்று வீசி வருவதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை – அம்பலத்தடி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தொன்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு சேதமடைந்துள்ளது.

இதேவளை, கண்டி – பன்வில – நெல்லிமலை பகுதியிலுள்ள நெல்லிமலை ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் அருகிலுள்ள வீடுகள் சில தாழிறங்கியுள்ளதுடன், வீட்டு சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு சுமார் 64 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக 18 குடும்பங்கள் இடம்பெயர்ந்து சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை, மாத்தளை – அல்கடுவ – வத்தேகம வீதியில் இம்புல்பிட்டிய பகுதியில் நேற்றிரவு மண்மேடு மற்றும் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளமையால் முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

பிரதேச மக்கள், வீதி அதிகார சபை ஊழியர்கள் இணைந்து இன்று பிற்பகல் மண்மேடு மற்றும் மரங்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, மாத்தளை – அல்கடுவ – வத்தேகம வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்